Pages

Sunday, September 16, 2018

Division

வகுத்தலின் சில பண்புகள்:


  • தொடர்ச்சியாக ஒரு எண் மூன்று முறை வந்தால் அந்த எண் 3 மற்றும் 37 ஆல் வகுபடும்.
Ex.   111, 222, 333, ..............
  • தொடர்ச்சியாக ஒரு எண் ஆறு முறை வந்தால் அந்த எண் 3, 7, 11, 13 மற்றும் 37 ஆல் வகுபடும்.

Ex.   111111, 222222, 333333, .........


7 ஆல் வகுபடுபவை:

ஒரு மிக பெரிய எண் 7 ஆல் வகுபடுமா என்பதை காண (-2) நமக்கு உதவுகிறது.

99995: 

இறுதி எண்ணை நீக்கி 2 ஆல் பெருக்கி கழிக்க வேண்டும்

9999 -2*5 = 9989

இறுதி எண்ணை நீக்கி 2 ஆல் பெருக்கி கழிக்க வேண்டும்

998 -2*9 = 980

இறுதி எண்ணை நீக்கி 2 ஆல் பெருக்கி கழிக்க வேண்டும்

98 -2*0 = 98

இப்பொழுது 98 என்ற மதிப்பு 7 ஆல் வகுபடக்கூடியது.  எனவே 99995 என்பதும் 7 ஆல் வகுபடக்கூடிய எண்ணாகும்.


11 ஆல் வகுபடுபவை:

11 ஆல் வகுபடும் எண்களை கண்டறிவது மிக எளிது.

ஒற்றை படை இடங்களில் உள்ள எண்களையும், இரட்டை படை இடங்களில் உள்ள  எண்களையும் கூட்டி கழித்தால் 0 வந்தது எனில் அது 11 ஆல் வகுபடும்.  இல்லையெனில் வகுபடாது.

Ex:
     12342:
ஒற்றை படை எண்களின் கூடுதல் = 1+3+2 = 6
இரட்டைப் படை எண்களின்  கூடுதல் = 2+4 = 6

இரண்டின் வேறுபாடு = 6 - 6 = 0

எனவே 12342 என்பது 11 ஆல் வகுபடும்.


No comments:

Post a Comment

Quiz 6

Quiz Quiz in Maths All the best for your test